Saturday, November 21, 2009

டிவியில விளம்பரம் பாத்தீங்களா?

விளம்பரங்களுக்கென்றே இன்று தமிழகம் முழுவதும் கடைகாரர்களும், ஏஜெண்டுகளும் முழு கவனம் செலுத்தி கடைகளில் விற்பனையை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் மக்களின் கவனத்திற்கு

இந்த வார முத்து: இசை=இன்னல்+இன்பம்=மகிழ்ச்சி=வாழ்க்கை

அழகே உன்னை ஆராதிக்கிறேன்......- தமிழச்சி தங்கபாண்டியன்


எழுதுவதைவிட பேச்சு எளிதானது. நேரிடைத்தன்மை கொண்டது. கண் பார்த்து, முகம் பார்த்து பேசுகிற நிறைவை வெள்ளைத்தாளின் கறுப்பு எழுத்துக்களால் தர முடியாது. ஆனால், எனக்கு நானே பேசிக்கொள்கின்ற ஒரு மன நிறைவை எழுதும்போது உணர்கிறேன். அதற்காக, என்னுள்ளே உறைந்தவற்றை இனி உங்களோடு பகிர்ந்துகொள்வேன். ஒவ்வொரு இதழிலும் வெவ்வேறு விஷயங்களைப் பேசவிருக்கிறேன். இப்போது, முதல் விஷயம் என்ன தெரியுமா? அழகு! யாருக்குத்தான் பிடிக்காது? ‘அவள் பேரழகி’ என்று கிளியோபாட்ராவில் அழகில் வியக்கிற ஷேக்ஸ்பியர், ‘‘வயது ஒருபோதும் அவளை வீழ்த்தாதுவழமையினால் ஒருக்காலும் அவளது முடிவற்ற அழகின் பரிமாணங்கள் தேயாது’’ என்கிறார்
‘‘Age cannot wither her beauty;
Nor custom stale her infinite variety.’’
- ஷேக்ஸ்பியர்
அன்று, இரவு முழுவதும் பெய்த மழையில் சுகித்திருந்த பூமி, அதிகாலைக் குளியலுக்குப் பின் பேரழகாய் இருந்தது. வேப்ப மரங்கள் காய்கள் உதிர்த்து, வெறும் இலைகளின் மேல் நீர்த்துளிகளுடன் தளுக்கிக் கொண்டிருந்தது. முருங்கைகளின் நுனிவரை வழிகின்ற நீரை உறிஞ்சிப் போகின்ற அணில், தென்னை ஓலைகளைத் ‘திடுக்’கிடச் செய்யும் பச்சோந்தி- என பிரபஞ்சம் முழுமையையும் அந்த அழகு வியாபித்துக் கொண்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு நாளும் இயற்கை நம்மை வியக்க வைக்கிறது.ணீ‘அழகு என்றால் என்ன?’ இந்தக் கேள்விக்கு, ‘‘கண்ணுக்கும், மனசுக்கும் சந்தோஷம் தர்ரதுதேன், அர்த்தம் பார்த்தாக்க அழகேது’’ என்கிறாள் எங்கள் ஊரைச் சேர்ந்த பாக்கியம். அவள் கொத்தனார் வேலை பார்க்கிறவள். விவரிப்புக்கள், தத்துவங்கள், கோட்பாடுகள், கற்பனைகள் முதலிய சட்டகத்துக்குள் அடங்காத ஒரு அதிசயம்தான் அழகு. அது உணர மட்டுமே முடிந்த ஒரு உயிர்ப்பூ. இதற்கு எத்தனை, எத்தனை உதாரணங்கள்?மிக மெலிதாய்ப் புன்னகைத்து, ஓரக்கண்ணால் காதல் வழியப் பார்க்கையில் பெண் அழகு. நேர் கண் பார்த்து, உறுத்தாமல் கை குலுக்குகையில் நண்பன் அழகு. பொய்யற்று, காமத்தைக் காதலுடன் பரிமாறும் ஆண் அழகு. ரகசியங்கள் அற்றுத் தோள் சாய்கையில், நிபந்தனையற்ற அன்பு செய்யும் தோழி ஒரு அழகு. வழிப்போக்கனை நோக்கிக் கைகாட்டிச் சிரிக்கும் குழந்தை அழகு. சுருக்கங்களை ஒப்பனையால் மறைக்காமல் கனிந்திருக்கும் வயோதிகம் அழகு. அதிரச் சிரித்துக் காலத்தைச் சவாலுக்கு இழுக்கும் இளமையோ! அதிஅழகு.அப்படியென்றால், புலன்களைக் கிளர்ச்சி அடையச் செய்யும் பரவசம்தான் அழகா? கற்பிக்கப்பட்ட ஜோடனைகளுடன், பெண் என்றால் இன்னின்ன எடைகள், இன்னின்ன உடைகள். வளைவுகள், நெளிவுகள் என்பதும்... ஆண் எனில், வலுவேற்றப்பட்ட உடல் என்பதும் அழகின் எடைக் கற்களாக எப்போது மாறின? இது எப்படி நிகழ்ந்தது? உலகமயம். தனியார்மயம். தாராளமயம் போன்ற பொருளாதாரச் சந்தையும் அதனோடு கூடிய ஒற்றைக் கலாசாரப் போக்குமே இந்தப் பிறழ்வுக்கான காரணிகள். என்றாலும், ஆதியிலிருந்தே ‘அழகு’ என்பது ‘புனைவு’ எனும் பதத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறது. இதன் திரை கிழித்து, இயல்பாய் எளிமையாய்... சற்று கற்பனை கலந்து துருத்தி நிற்காமல், ரசனையோடு தம்மை வெளிப்படுத்தும்போது, புனைவின் குரூரம் உடைகிறது. அப்போது அழகு, தனித்த ஒரு கொண்டாட்டமாகின்றது.பொதுப் புத்தியில் இங்கே ஒரு கருத்து நிலவுகிறது.- அறிவுஜீவிகள் அல்லது அறிவு சார்ந்து இயங்குபவர்கள் எல்லாம் புறத்தோற்றம் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதே அழகு என்கிறார்கள். ஆனால், உடம்பையும் மனதையும் பேணிக்காத்து, எளிமையான அலங்காரத்துடன் இயற்கை நமக்களித்த மலர்கள், கைவினைப் பொருட்களினால் செய்யப்பட்ட ஆபரணங்கள், இயற்கை வாசனைத் திரவியங்கள் முதலியவற்றை அணிந்து மகிழ்தலும் மரபார்ந்த, அறிவு சார்ந்த இயங்குதலே ஆகும். உறுத்தாத அலங்காரமும் உடையும் நகரத்தின் இடைத்தட்டு மற்றும் மேல்தட்டு மக்களுக்கு அழகென்றால்; மருதாணியும் தூதுவளைக் கண் மையும், கண்ணாடி வளையலும், கலர்ப் பாசியும் கிராமத்துப் பெண்களுக்கு அழகு. வயல் வேலை முடிந்ததும் களிமண்ணை எடுத்து (இன்றைய modern spammud pack) முகத்திலும், உடம்பிலும் தடவிக் குளிக்கின்ற உழைக்கும் பெண்களின் அழகிற்கு இணையாக எதுவும் இல்லை. நாள் முழுக்க உழைத்த வியர்வை ஆறாய்ப் பெருக... உச்சி வெயிலில் கைக்குழந்தைக்குப் பாலூட்டும் கிராமத்துப் பெண்களின் வெடித்த பாதங்களை விட ‘கேட் வாக்’ செய்யும் மாடல் அழகிகளின் பாதங்களில் பெரிதாக அழகில்லை.மக்களின் பொருளாதார, கலாசார, இன, வரலாற்று அளவுகோல்களை வைத்தே அழகு என்பது கட்டமைக்கப்படுகிறது. அவை புறத் தோற்றங்களால் அளவிடப்படுகிறது. உண்மையில், அழகு என்பது ஒரு ‘மித்’. அது காற்றுக் குமிழியைப் போல. வண்ணம் இருக்கும், வடிவம் இருக்கும். நம்மை மகிழ்ச்சிப்படுத்தும். ஆனால், தொட்டால் காணாமல் போய்விடும். ஆக, பார்ப்பவரின் கண்களே அழகைத் தீர்மானிக்கின்றன. கயஸிடம் ‘‘யார் அழகு?’’ எனக் கேட்டதற்கு அவன், ‘‘லைலா’’ என்று சொல்லவில்லை. மாறாக, ‘‘கயஸின் லைலா’’ என்றானாம். ‘எனது லைலா, நான் பார்க்கின்ற லைலா’ என்பதுதான் இதன் பொருள். மொத்தத்தில் பற்பல படிமங்கள், கருத்துருவாக்கங்கள், புனைவுகள், கற்பனைகள், பொருளாதார, கலாசார, பண்பாட்டுச் சுமைகள். பாலின சமத்துவமின்மை, நுகர்வுக் கட்டுமானம், இவற்றால் கட்டமைப்பட்டதே ‘அழகு’ என்கிற உருவாக்கம். தெள்ளத் தெளிவான புரிதலுடன், அறிவுசார்ந்த இயங்குதலின் தன்னம்பிக்கையுடன், ‘அழகு பற்றி எழுதியாகிவிட்டது’ என்ற நம்பிக்கையில் காலாறத் தோட்டத்தில் நடந்தேன். ‘ரோஜாவை என்ன பெயரிட்டு அழைத்தாலும் ரோஜாதான்’ என்கிற புரிதலுடன் அங்கிருந்த ரோஜாவின் அருகில் சென்றேன். அது முகத்தைத் திருப்பிக் கொண்டது. ‘அடுத்தவரை உறுத்தாத கற்பனையும், பகுத்தறிவுக்கு உட்படாத சில மயக்கங்களும் நிரம்பிய சராசரிப் பெண்ணாக திரும்பி வந்தால் உன்னை முத்தமிடுகிறேன்’ என்று ரோஜா சொல்வதாக நினைத்துக்கொண்டேன்.அட, ஆமாம்! மழைக்குப் பிறகான அதிகாலையில், அறிவால் பகுத்தறியப்படாத அந்த ரோஜாதான் எத்தனை அழகு? ‘உலகின் தலைசிறந்த அழகி யார்?’ என மாயக் கண்ணாடியிடம் கேட்டபோது, ‘‘ஒப்பு நோக்காமல், எடைபோடாமல், இயல்பாய் இருப்பவள்; புன்னகை என்னும் மாய ரஸத்தை தன்னிடத்தே வைத்திருப்பவள்’’ என்றதாம். கண்ணாடிகளற்ற உலகத்தில், தன் நிலத்தில் தான் உழைத்து, உணவுண்டு, துணையுடன் இணைந்து, களித்து, களைப்பு நீங்கித் துயிலெழும், பேரழகிகள் என் கிராமத்திலுண்டு. -அந்த ரோஜாவைப் போலவே அவர்கள்தான் எத்தனை அழகு! நான் வியந்துகொண்டே இருக்கிறேன்...



அவிழாப் பூ


பட்டாம் பூச்சிகளின் இருப்பும், அழகும் பற்றிய பாடம் ஒன்றில் பள்ளித்தேர்வு மகளுக்கு. இருப்பு குறித்து, ‘‘பலவித வண்ணங்கள் கொண்டவை.கண நேர சொர்க்கமாய்கைகளில் தட்டுப்பட்டுவிசுக்கென்று மேலெழும்பிவானவில்லாய் பறப்பவை.விடுதலை தரும் விரல்களுக்குபேரன்பின் விகசிப்பைபிசுபிசுப்பாய் பரிசளிப்பவை.இமைகளுக்குள் சிக்காத இருஇறக்கைக் கண்கள்.காற்றுடன் சல்லாபிக்கின்ற காதல் தேவதைகள்’’.&இப்படி விளக்கினேன்.விழி விரிய மகள் தொடர்ந்தாள் -‘‘அவைகளுக்கு என்ன பிடிக்கும்?’’‘‘பூமிப் பந்தும், பூக்களின் தேனும்’’‘‘பிடிக்காதது -?’’‘‘உன், என் பெருவிரலும், சுட்டு விரலும்’’.கொஞ்சம் யோசித்துப் பின் கேட்டாள் -‘‘எல்லாம் சரி,அசிங்கமான கம்பளிப்பூச்சி அம்மாவிடம் இருந்துஅழகான பட்டாம்பூச்சி பாப்பா எப்படி வந்தது?’’அழகு எனும் புதிரை எப்படி அவிழ்க்க?